நாடு முழுவதும் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்: பிரதமர் மோடி, ஜனாதிபதி வாழ்த்து
நாடு முழுவதும் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஹோலி பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,
வசந்த காலத்தை வண்ணங்களால் வரவேற்கும் விதமாக இந்துக்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். வண்ணங்களின் திருவிழாவான ஹோலி அன்று தங்களது துன்பங்கள் தொலைந்து வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும் என மக்கள் நம்புகின்றனர். நாடு முழுவதும் ஹோலி பண்டிகை நேற்றும் இன்றும் கொண்டாடப்படுகிறது.
தீபாவளிப் பண்டிகைக்கு இனிப்பு போல, ஹோலிப் பண்டிகைக்கு சிறப்பு சேர்ப்பது வண்ணங்கள் தான். வடமாநிலங்களில் இந்த பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் வாழ்த்துச்செய்தியை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதேபோல், துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோரும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துச்செய்தி தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story