அரியானாவில் 60 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 1 1/2 வயது குழந்தை; மீட்பு பணி தீவிரம்
அரியானாவில் 60 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் ஒன்றரை வயது குழந்தை தவறி விழுந்துள்ளது.
ஹிசார்,
அரியானாவின் ஹிசார் நகரில் கிராமம் ஒன்றில் தனது வீட்டின் முன் நதீம் என்ற ஒன்றரை வயது குழந்தை விளையாடி கொண்டு இருந்துள்ளது.
இந்த நிலையில் அங்கிருந்த 60 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் நதீம் தவறி விழுந்துள்ளான். இதுபற்றிய தகவல் அறிந்து தேசிய பேரிடர் பொறுப்பு படையினர் மற்றும் ராணுவத்தின் நிபுணர்கள் அடங்கிய குழு மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கிணற்றுக்குள் உள்ள குழந்தை சுவாசிக்க உதவும் வகையில் பிராணவாயு குழாய்களை செலுத்தியுள்ளனர். மருத்துவ குழு ஒன்றும் அங்கு சென்றுள்ளது.
Related Tags :
Next Story