பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு, வாரணாசியில் பிரதமர் மோடி, அத்வானி தொகுதியில் அமித்ஷா போட்டி
பா.ஜனதா கட்சி 182 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
மத்திய அமைச்சரும், பா.ஜனதா தலைவருமான ஜே.பி. நட்டா பா.ஜனதாவின் வேட்பாளர்களை அறிவித்து வருகிறார். பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஒடிசா மாநிலம் பூரியில் போட்டியிடலாம் என தகவல் வெளியாகிய நிலையில், அவர் மீண்டும் வாரணாசியிலேயே போட்டியிடுகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, காந்தி நகரில் போட்டியிடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காந்தி நகர் தொகுதி பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானியின் தொகுதியாகும். 1998-ம் ஆண்டில் இருந்து அத்வானி இத்தொகுதியில் இருந்து எம்.பி.யாக இருந்து வருகிறார். இப்போது அமித்ஷாவிற்கு செல்கிறது. அமித்ஷா இப்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் போட்டியிடுகிறார். நிதின் கட்காரி நாக்பூரில் போட்டியிடுகிறார். விகே சிங் காசியாபாத்திலும், ஹேமமாலினி மதுராவிலும், அமேதியில் ஸ்மிருதி இரானியும் போட்டியிடுகிறார்கள். அமேதி தொகுதி ராகுல் காந்தியின் தொகுதியாகும். கடந்த முறை ஸ்மிருதி இரானி போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
Related Tags :
Next Story