புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்தார்


புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்தார்
x
தினத்தந்தி 21 March 2019 10:41 PM IST (Updated: 21 March 2019 10:41 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

புதுச்சேரி,

காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணியில் புதுவை எம்.பி. தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட சபாநாயகர் வைத்திலிங்கம் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஆலோசிக்க டெல்லி வருமாறு முதல்-மந்திரி  நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், சபாநாயகர் வைத்திலிங்கம், முன்னாள் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் ஆகியோரை மேலிடம் அழைத்திருந்தது. மேலிட அழைப்பினை ஏற்று அவர்கள் டெல்லி சென்றிருந்தனர்.

அங்கு மேலிட தலைவர்களுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து சபாநாயகர் வைத்திலிங்கம் காங்கிரஸ் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகர் சிவகொழுந்துவிடம் அளித்தார்.  புதுச்சேரி மக்களவை தேர்தலில் வைத்திலிங்கம் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story