அத்வானி தொகுதியில் அமித்ஷா: ‘மூத்தவர்களை மோடி மதிப்பது இல்லை’ காங்கிரஸ் கருத்து


அத்வானி தொகுதியில் அமித்ஷா: ‘மூத்தவர்களை மோடி மதிப்பது இல்லை’ காங்கிரஸ் கருத்து
x
தினத்தந்தி 22 March 2019 5:30 AM IST (Updated: 22 March 2019 10:13 AM IST)
t-max-icont-min-icon

குஜராத் மாநிலம் காந்திநகர் நாடாளுமன்ற தொகுதியில் 1991–ம் ஆண்டு தேர்தலிலும், 1998–ம் ஆண்டு முதல் கடந்த தேர்தல் வரையிலும் எல்.கே.அத்வானியே போட்டியிட்டு வந்தார்.

புதுடெல்லி, 

பா.ஜனதா வெளியிட்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் அத்வானி தொகுதியில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

இது குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவிக்கையில், ‘‘நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்ற பிறகு அத்வானியை பார்வையாளராக நாடாளுமன்றத்தில் அமர வைத்தார். தற்போது காந்திநகர் தொகுதியில் அத்வானிக்கு வாய்ப்பு தராமல் ஒதுக்கி உள்ளார். மூத்தவர்களை மோடி மதிப்பது இல்லை. இவர் எப்படி மக்களின் உணர்வுகளை மதிக்க போகிறார். எனவே பா.ஜ.க.வை பதவியில் இருந்து மக்கள் தூக்கி எறிய வேண்டும்’’ என கூறியுள்ளது.


Next Story