பாகிஸ்தான் தேசிய தின விழாவில் இந்திய பிரதிநிதிகள் கலந்து கொள்ள மாட்டார்கள்: மத்திய அரசு


பாகிஸ்தான் தேசிய தின விழாவில் இந்திய பிரதிநிதிகள் கலந்து கொள்ள மாட்டார்கள்: மத்திய அரசு
x
தினத்தந்தி 22 March 2019 11:32 AM IST (Updated: 22 March 2019 11:32 AM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தான் தேசிய தின விழாவில் இந்திய பிரதிநிதிகள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

பாகிஸ்தான் தேசிய தினம் மார்ச் 23-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தேசிய தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு இந்திய அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

அதேவேளையில், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கும் பாகிஸ்தான் தூதரகம் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாகிஸ்தான் தேசிய தின  நிகழ்ச்சியில் இந்திய பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Next Story