தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியீடு


தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 22 March 2019 10:45 PM GMT (Updated: 2019-03-23T03:28:18+05:30)

தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சந்திரசேகர் ராவ் மகளுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானாவில் உள்ள 17 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சி வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் டி.ஆர்.எஸ். கட்சித்தலைவரும், முதல்–மந்திரியுமான சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவுக்கு, நிசாமாபாத் தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இதைப்போல தெலுங்குதேசம் கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் டி.ஆர்.எஸ். கட்சியில் சேர்ந்த நாம நாகேஸ்வரராவுக்கு இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இவர் கம்மம் தொகுதியில் டி.ஆர்.எஸ். சார்பில் களம் காணுகிறார்.

அதேநேரம் டி.ஆர்.எஸ். கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவரான ஜிதேந்தர் ரெட்டிக்கு சீட் வழங்கப்படவில்லை. இது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதைப்போல கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பால்கா சுமன், மல்லா ரெட்டி ஆகிய 2 எம்.பி.க்களுக்கும் சீட் ஒதுக்கவில்லை. இவர்கள் இருவரும் கடந்த டிசம்பர் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.க்களாக வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story