தேர்தலில் வெற்றி பெற்றால் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து- எம்ஏஎஸ் சுப்பிரமணியன் பேட்டி


தேர்தலில் வெற்றி பெற்றால் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து- எம்ஏஎஸ் சுப்பிரமணியன் பேட்டி
x
தினத்தந்தி 23 March 2019 4:30 PM IST (Updated: 23 March 2019 7:41 PM IST)
t-max-icont-min-icon

வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

புதுச்சேரி:

நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. இதற்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கமல், கடந்த 20ம் தேதி வெளியிட்டார். இதில் புதுச்சேரி தொகுதியில் டாக்டர். எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 

இந்நிலையில், புதுச்சேரி தொகுதி வேட்பாளர் டாக்டர். எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:

புதுச்சேரியில் தனி மாநில அந்தஸ்து, கடன்களை தள்ளுபடி செய்தல் மற்றும் மத்திய நிதி ஆணையத்தில் புதுச்சேரியை இணைத்தல் ஆகியவை தான் முக்கிய பிரச்சினையாக உள்ளன. ஒவ்வொரு தேர்தலின் போதும் அனைத்து கட்சியினரும் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என கூறி வருகின்றனர். ஆனால், பாராளுமன்றத்தில் இது குறித்து பேசுவது கூட இல்லை. எனக்கு ஒரு வாய்ப்பளித்தால், நிச்சயம் அடுத்த 2 ஆண்டுகளில் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும். 

மேலும் எனது தேர்தல் பிரச்சாரத்தினை மார்ச் 27 அன்று கலாபேட்டிலிருந்து துவங்க உள்ளேன். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஏஎப்டி மைதானத்தில் நடக்கவிருக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வார்.

Next Story