10 ஆண்டுகளில் ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு உயர்ந்தது எப்படி? பா.ஜனதா கேள்வி


10 ஆண்டுகளில் ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு உயர்ந்தது எப்படி? பா.ஜனதா கேள்வி
x
தினத்தந்தி 24 March 2019 5:00 AM IST (Updated: 24 March 2019 2:15 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு கடந்த 2004–ம் ஆண்டில் ரூ.55 லட்சமாக இருந்த நிலையில், 10 ஆண்டுகளில் அதாவது 2014–ம் ஆண்டு ரூ.9 கோடியாக உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.

புதுடெல்லி, 

பா.ஜனதா கட்சி காங்கிரசுக்கு இது தொடர்பாக கேள்விக்கணைகளை தொடுத்து உள்ளது.

இது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘நமக்கு தெரிந்த வரையில், ராகுல் காந்திக்கு ஒரு எம்.பி.க்கான வருமானம் மட்டுமே வரும். ஆனால் 2004–ம் ஆண்டு ரூ.55 லட்சமாக இருந்த அவரது சொத்து மதிப்பு 2009–ல் ரூ.2 கோடியாகவும், 2014–ம் ஆண்டு ரூ.9 கோடியாகவும் அதிகரித்து இருக்கிறது. இது ராகுல் காந்தி மாதிரி, வளர்ச்சியாக தெரிகிறது’ என்று தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் வருமான ஆதாரம் எது? என நாங்கள் அறிய விரும்புகிறோம் என்று கூறிய ரவிசங்கர் பிரசாத், வெறும் ஒரு எம்.பி.யான ராகுல் காந்தியின் வருமானம் 10 ஆண்டுகளில் இந்த அளவுக்கு பெருகியது எப்படி? என்பதை பா.ஜனதா அறிய விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.


Next Story