மாதா அமிர்தானந்தமயிக்கு டாக்டர் பட்டம் : மைசூரு பல்கலைக்கழகம் வழங்கியது


மாதா அமிர்தானந்தமயிக்கு டாக்டர் பட்டம் : மைசூரு பல்கலைக்கழகம் வழங்கியது
x
தினத்தந்தி 24 March 2019 5:00 AM IST (Updated: 24 March 2019 5:00 AM IST)
t-max-icont-min-icon

உலக புகழ்பெற்ற ஆன்மிக தலைவரான மாதா அமிர்தானந்தமயி தேவிக்கு மைசூரு பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

கொல்லம், 

கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள அம்ரிதாபுரி ஆசிரமத்தில் இதற்கான விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் மைசூரு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஹேமந்த குமார் கலந்துகொண்டு மாதா அமிர்தானந்தமயி தேவிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார். ஆன்மிக கல்வி மற்றும் சமூக பணிக்காக அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதாக துணைவேந்தர் தெரிவித்தார்.

மாதா அமிர்தானந்தமயிக்கு ஏற்கனவே 2010–ம் ஆண்டு நியூயார்க் மாகாண பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story