தலைமை தேர்தல் கமிஷனருடன் விவேகானந்தா ரெட்டி மகள் சந்திப்பு : தந்தை கொலையில் நியாயமான விசாரணைக்கு வலியுறுத்தல்
ஆந்திர மாநிலம், கடப்பாவில், மறைந்த முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் தம்பியும், முன்னாள் மந்திரியுமான விவேகானந்தா ரெட்டி கடந்த 15-ந் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
புதுடெல்லி,
முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தேர்தல் பிரசாரத்தின்போது இதை பிரச்சினையாக்கி வருகிறார்.
இதற்கு விவேகானந்தா ரெட்டியின் மகள் சுனிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையொட்டி அவர் டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோராவை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், “எனது தந்தை ஒரு வாரத்துக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுவரும் விதம் எனக்கு கவலையை அளித்துள்ளது. எனவே தலைமை தேர்தல் கமிஷனரை சந்தித்து புகார் செய்தேன். என் தந்தை கொலையில் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
குடும்ப உறுப்பினராலேயே எனது தந்தை கொலை செய்யப்பட்டார் என்றும், எனது தந்தை கொலைக்கு ஜெகன்மோகன் ரெட்டிதான் பொறுப்பு என்றும் முதல்-மந்திரி சொல்லி வருகிறார். சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடந்து வருகிறபோது, அது தனது அறிக்கையை இன்னும் அளிக்காத நிலையில், இதேபோன்று முதல்-மந்திரி கூறினால் அது விசாரணையை பாதிக்காதா?” என்று கேள்வி எழுப்பினார்.
Related Tags :
Next Story