தேசிய செய்திகள்

இ-சிகரெட்டுகளுக்கு நிரந்த தடை கோரி பிரதமர் மோடிக்கு 1000 டாக்டர்கள் கடிதம் + "||" + Enforce e cigarettes ban, 1000 doctors write to PM Narendra Modi

இ-சிகரெட்டுகளுக்கு நிரந்த தடை கோரி பிரதமர் மோடிக்கு 1000 டாக்டர்கள் கடிதம்

இ-சிகரெட்டுகளுக்கு நிரந்த தடை கோரி பிரதமர் மோடிக்கு 1000 டாக்டர்கள் கடிதம்
இ-சிகரெட்டுகளுக்கு நிரந்த தடை கோரி பிரதமர் மோடிக்கு 1000 டாக்டர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

கொல்கத்தா, 


இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் இ–சிகரெட் எனப்படும் எலெக்ட்ரானிக் சிகரெட் மீதான மோகம் அதிகரித்துள்ளது. இதனால் இதன் விற்பனைக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு தடை விதித்தது.

இதை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் கண்காணிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டது. இருப்பினும் சில நிறுவனங்கள் இணையதளத்தில் இ–சிகரெட்டுகளை தொடர்ந்து விளம்பரப்படுத்தி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் இ–சிகரெட்டுகள் விற்பனைக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1,061 டாக்டர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர். 24 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களை சேர்ந்த டாக்டர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். 

சில நிறுவனங்கள் இணையதளத்தில் இ–சிகரெட்டுகள், இ–ஹூக்கா போன்றவற்றை தொடர்ந்து விளம்பரப்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர். இது மக்களின் உடல்நலம் சார்ந்த பிரச்சினையாகும். இ சிகரெட்கள் உடல் நலத்திற்கு பெரும் தீங்கு விளைவிப்பது. எனவே, அதற்கு நிரந்தர தடைவிதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: டிரம்ப் வலியுறுத்தல்
காஷ்மீர் விவகாரம் குறித்து இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
2. முதலாவது நினைவு தினம்: வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி
வாஜ்பாயின் முதலாவது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
3. இந்தியர்களின் வாழ்வில் கரையான்கள் போன்று ஊழல் ஊடுருவி விட்டது; பிரதமர் மோடி
இந்தியர்களின் வாழ்வில் கரையான்கள் போன்று ஊழல் ஊடுருவி விட்டது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
4. 75-வது சுதந்திர தினம் கொண்டாடும் போது இந்தியாவில் ஊழல் என்பதே இருக்க கூடாது - பிரதமர் மோடி
75-வது சுதந்திர தினம் கொண்டாடும் போது இந்தியாவில் ஊழல் என்பதே இருக்க கூடாது என பிரதமர் மோடி கூறினார்.
5. இன்னொரு மகாபாரதத்தைப் பார்க்க விரும்புகிறீர்களா? ரஜினிக்கு ஐதராபாத் எம்.பி. கேள்வி
இன்னொரு மகாபாரதத்தைப் பார்க்க விரும்புகிறீர்களா? என ரஜினிக்கு ஐதராபாத் எம்.பி. அசாதுதின் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.