கட்சியில் ஓரங்கட்டப்படுகிறாரா? எல்.கே.அத்வானி தான் தெளிவுபடுத்த வேண்டும் மத்திய மந்திரி சொல்கிறார்


கட்சியில் ஓரங்கட்டப்படுகிறாரா? எல்.கே.அத்வானி தான் தெளிவுபடுத்த வேண்டும் மத்திய மந்திரி சொல்கிறார்
x
தினத்தந்தி 24 March 2019 11:00 PM GMT (Updated: 24 March 2019 9:42 PM GMT)

பா.ஜ.க.வின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானி கடந்த 1998-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலிலும் குஜராத் மாநிலத்தின் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்டு வந்தார்.

புதுடெல்லி,

தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு காந்தி நகர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் எல்.கே.அத்வானிக்கு இந்த முறை ‘சீட்’ வழங்கப்பட வாய்ப்பில்லை என்றும், அவர் ஓரங்கட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய, பா.ஜ.க. தலைவரும், மத்திய மந்திரியுமான உமா பாராதியிடம் இந்த விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்து பேசுகையில் “எல்.கே. அத்வானி தான் இது குறித்து தெளிவுபடுத்த வேண்டும். நான் உள்பட வேறு யாரும் இதுபற்றி பேசுவது முறையாக இருக்காது.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “பா.ஜ.க. இந்த நிலைக்கு உயர்ந்திருப்பதற்கும், நரேந்திர மோடி பிரதமராக இருப்பதற்கும் எல்.கே. அத்வானி அதிகம் உழைத்துள்ளார். அவர் ஒருபோதும் எந்தவித பதவிக்காவும் ஏங்கியது கிடையாது” என தெரிவித்தார்.

Next Story