முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்


முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்
x
தினத்தந்தி 25 March 2019 6:09 AM GMT (Updated: 25 March 2019 6:09 AM GMT)

அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

புதுடெல்லி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூரில் கடந்த 1998 -ம் ஆண்டு நடந்த போராட்டத்தில், அரசு வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கில், பாலகிருஷ்ண ரெட்டிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம், 3 ஆண்டுகள் சிறைதண்டனையும், 10 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து, அவரது அமைச்சர் பதவி பறிபோனது. 

இதற்கிடையே, தான் மேல்முறையீடு செய்யப் போவதாகவும், தண்டனையை நிறுத்தி வைக்கவும் கோரி, பாலகிருஷ்ண ரெட்டி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிறை தண்டனையை மட்டும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.   அதேவேளையில், பாலகிருஷ்ண ரெட்டி மீதான வழக்கு விசாரணைக்கு எந்த தடையும் இல்லை எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த இடைக்கால தடை மூலம், மேல் முறையீட்டு வழக்கில் விசாரணை முடியும் வரை பாலகிருஷ்ண ரெட்டி சிறை செல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

Next Story