தேசிய செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வென்றால், பாகிஸ்தான் கொண்டாடும் : குஜராத் முதல்வர் விஜய் ரூபானி + "||" + Diwali will be celebrated in Pakistan if Congress wins LS polls, says Gujarat CM Rupani

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வென்றால், பாகிஸ்தான் கொண்டாடும் : குஜராத் முதல்வர் விஜய் ரூபானி

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வென்றால், பாகிஸ்தான் கொண்டாடும் : குஜராத் முதல்வர் விஜய் ரூபானி
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வென்றால், பாகிஸ்தான் தீபாவளியாக கொண்டாடும் என்று குஜராத் முதல்வர் பேசியுள்ளார்.
அகமதாபாத்,

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால், அதை பாகிஸ்தான் தீபாவளியாக கொண்டாடும் என்று குஜராத் முதல் மந்திரி விஜய் ரூபானி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குஜராத்தின் மெக்சனா  பகுதியில், பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சாரத்தை  துவக்கி வைத்து பேசிய விஜய் ரூபானி கூறியதாவது:- 

“ மக்களவை தேர்தல் முடிவுகளில் ஒருவேளை காங்கிரஸ் வெற்றி பெற்று விட்டால், பாகிஸ்தான் அதனை தீபாவளியாக கொண்டாடும். ஏனெனில் காங்கிரஸ்  அவர்களுக்கு நெருக்கமானவர்கள். 

மே 23 -ல் மோடியை வெற்றி பெற செய்ய வேண்டும் என நாட்டு மக்கள் அனைவரும் உறுதி எடுக்க வேண்டும். அப்போது தான்  பாகிஸ்தானுக்கு அது பயத்தை அளிக்கும். 

காங்கிரஸ்  தலைவர்கள், பாகிஸ்தான் குரலாகவே பேசுகின்றனர்.  காங்கிரஸ் ஓட்டு வங்கி அரசியலுக்காக பிரிவினைவாத இயக்கங்களை ஊக்குவித்தது. மோடியும், அமித்ஷாவும் குஜராத்தின் மகன்கள். உலக அரங்கில் இந்தியாவை உச்சிக்கு கொண்டு செல்ல உழைத்து வருகின்றனர்.

மோடியை தோற்கடிக்கவே எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்துள்ளன. மக்கள் தங்களின் ஓட்டுக்கள் மூலம் வரலாறு படைக்க வேண்டும்” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் நிதி மந்திரி திடீர் ராஜினாமா
பாகிஸ்தான் நிதி மந்திரி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
2. உலகைச் சுற்றி...
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் படின் மாவட்டத்தில் பயணிகள் பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியாகினர்.
3. காஷ்மீர் மாநிலத்தில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு வெடிகுண்டுகள் சப்ளை செய்யும் சீனா
காஷ்மீர் மாநிலத்தில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகளுக்கு சீன வெடிகுண்டுகளை பாகிஸ்தான் வழங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் நேற்று ஒரே நாளில் அறிவிக்கப்பட்டன.
5. பாகிஸ்தானில் பேருந்தில் பயணம் செய்த 14 பயணிகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானில் பேருந்தில் பயணம் செய்த 14 பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.