முலாயம்சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு : சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்


முலாயம்சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு : சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
x
தினத்தந்தி 25 March 2019 7:33 AM GMT (Updated: 25 March 2019 7:33 AM GMT)

முலாயம்சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


புதுடெல்லி,

உத்தரபிரதேச முன்னாள் முதல் மந்திரி முலாயம்சிங் யாதவ்  மற்றும் அவரது மகன்கள் அகிலேஷ் யாதவ், பிரதீக் யாதவ் ஆகியோருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை சி.பி.ஐ. 2007 -ஆம் ஆண்டு பதிவு செய்தது. 

இந்த வழக்கு நீண்டகாலமாக நிலுவையில்  உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஸ்வநாத் சதுர்வேதி மனு ஒன்றை தாக்கல் செய்தார். 

அதில், முலாயம்சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை எந்த நிலையில் உள்ளது என்பதை நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தெரிவிக்க வேண்டும் என கோரப்பட்டு இருந்தது .

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்,  இரண்டு வாரங்களுக்குள் தனது பதில் மனுவை சி.பி.ஐ. தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரி சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 


Next Story