தேசிய செய்திகள்

பாஜக நட்சத்திர பிரசாரகர்கள் பட்டியலில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கும் இடம் இல்லை + "||" + BJP has released list of star campaigners for #LokSabhaElections2019 for UP

பாஜக நட்சத்திர பிரசாரகர்கள் பட்டியலில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கும் இடம் இல்லை

பாஜக நட்சத்திர பிரசாரகர்கள் பட்டியலில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கும் இடம் இல்லை
உத்தர பிரதேச மாநிலத்துக்கான பாஜக நட்சத்திர பிரசாரகர்கள் பட்டியலில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கும் பெயர் இடம் பெறவில்லை.
லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்துக்கான பாஜக நட்சத்திர பிரசாரகர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. 40 பேர் கொண்ட இந்த பட்டியலில், பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின் கட்காரி, அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், உமாபாரதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

வியப்பூட்டும் வகையில், இந்த பட்டியலில், பாஜகவின் மிக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் பெயர்  இடம் பெறவில்லை.  ஏற்கனவே, காந்திநகர் தொகுதியில் அத்வானிக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு அமித்ஷா பெயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது நினைவிருக்கலாம். 

அத்வானியும் தனக்கு காந்தி நகர் தொகுதியில், சீட் மறுக்கப்பட்டதால்,கடும் அதிருப்தியில் இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தன. இந்த நிலையில், நட்சத்திர பிரசாரகர்கள் பட்டியலிலும் அத்வானி பெயர் இடம் பெறாதது அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட அமித்ஷா
பாஜக தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் துப்புரவு பணியில் ஈடுபட்டார்.
2. துப்பாக்கி முனையில் மிரட்டி மருமகள் பாலியல் பலாத்காரம் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ மீது வழக்கு
துப்பாக்கி முனையில் மிரட்டி மருமகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
3. உன்னோவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ. பாஜகவில் இருந்து நீக்கம்
உன்னோவ் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ. பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
4. மராட்டியம்: காங்கிரஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா- பா.ஜனதாவில் இன்று சேர உள்ளதாக தகவல்
காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் இன்று பா.ஜனதாவில் சேருகிறார்கள்.
5. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து
பாஜக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.