தேசிய செய்திகள்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 15 நாட்களில் ரூ.540 கோடிக்கு பணம் பறிமுதல் - தேர்தல் ஆணையம் + "||" + EC seizes unaccounted cash, liquor other items worth Rs 540 crore

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 15 நாட்களில் ரூ.540 கோடிக்கு பணம் பறிமுதல் - தேர்தல் ஆணையம்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 15 நாட்களில் ரூ.540 கோடிக்கு பணம் பறிமுதல் - தேர்தல் ஆணையம்
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 15 நாட்களில் ரூ.540 கோடிக்கு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் தேதியை மார்ச் 10-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்த பின்னர் இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அதிகாரிகள் அதிரடி சோதனையை தொடங்கினர். இவ்வாறு கடந்த 15 நாட்களில் பறக்கும் படையினர் நாடு முழுவதும் நடத்திய சோதனையில், பணம், மதுபான பாட்டில்கள், தங்கம், வெள்ளி மற்றும் இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. 
 
பறக்கும் படையினரால் 15 நாட்களில் கணக்கில் தெரிவிக்கப்படாத ரூ.540 கோடி மதிப்பிலான பணம், தங்கம், மது மற்றும் இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ரூ.107.24 கோடி மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அடுத்த இடத்தில் உள்ள உத்தரபிரதேசத்தில் ரூ.104.53 கோடியும், ஆந்திராவில் ரூ.103.40 கோடியும், பஞ்சாப்பில்  ரூ.92.80 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு, பணத்தின் மதிப்பு ரூ.539.99 கோடியாகும். போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.