தமிழக சிறப்பு செலவின கண்காணிப்பாளராக மதுமகாஜன் நியமனம்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு


தமிழக சிறப்பு செலவின கண்காணிப்பாளராக மதுமகாஜன் நியமனம்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 26 March 2019 4:13 PM GMT (Updated: 26 March 2019 4:13 PM GMT)

தமிழக சிறப்பு செலவின கண்காணிப்பாளராக மதுமகாஜனை தேர்தல் ஆணையம் இன்று நியமித்துள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் வந்துள்ளன.  தமிழகத்தில் கடந்த 19ந்தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவடைந்துள்ளது.  இதுவரை 800க்கும் மேற்பட்டவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.  இடைத்தேர்தலில் 300க்கும் மேற்பட்டவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.  வேட்புமனுக்கள் பரிசீலனை நாளை நடைபெறும்.

இந்நிலையில், தமிழகம் மற்றும் கர்நாடக சிறப்பு செலவின கண்காணிப்பாளராக மதுமகாஜனை தேர்தல் ஆணையம் இன்று நியமித்துள்ளது.  இதேபோன்று ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவுக்கு கோபால் முகர்ஜி, அருணாசல பிரதேசம் மற்றும் நாகலாந்துக்கு டி.டி. கோயல் மற்றும் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவுக்கு சைலேந்திரா ஹண்டா சிறப்பு செலவின கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

Next Story