தேர்தலுக்கு முன்பு இன்னொரு தாக்குதலை இந்தியா நடத்தலாம்: இம்ரான் கான் சொல்கிறார்


தேர்தலுக்கு முன்பு இன்னொரு தாக்குதலை இந்தியா நடத்தலாம்: இம்ரான் கான் சொல்கிறார்
x
தினத்தந்தி 27 March 2019 1:42 AM GMT (Updated: 27 March 2019 1:42 AM GMT)

தேர்தலுக்கு முன்பு இந்தியா இன்னொரு தாக்குதலை நடத்தலாம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

இஸ்லமாபாத்,

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றம் அதிகரித்தது.  புல்வாமாவில் கடந்த மாதம் 14 ஆம் தேதி  ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு  தாக்குதல் நடத்தி 40 துணை ராணுவத்தினரை கொன்றது. 

இந்த அமைப்பு பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படுகிறது என்பதால் அதன் தலைவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 26-ம்தேதி இந்தியா விமானப்படை தாக்குதல் நடத்தி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்களை சிதைத்தது. இந்த விவகாரத்தால், இந்தியா -பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றம் அதிகரித்தது. 

இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதாக அந்நாட்டின் பிரபல நாளிதழான டானில் கூறப்பட்டுள்ளதாவது- நம்மை சூழ்ந்திருக்கும் ஆபத்து இன்னும் நீங்கவில்லை. 

இந்தியாவில் தேர்தலை முடியும் வரை நம்மை சூழ்ந்துள்ள நெருக்கடி அப்படியேதான் இருக்கும். தேர்தலுக்கு முன்பாக நரேந்திர மோடி நிர்வாகம் (மத்திய அரசு) நம்மீது தாக்குதல் நடத்தலாம். இதனை எதிர்கொள்வதற்கு அனைத்து விதங்களிலும் நாம் தயாராக இருக்கிறோம்.  இவ்வாறு இம்ரான் கான் கூறியுள்ளார். 


Next Story