தேசிய செய்திகள்

நிர்மலா சீதாராமன் பெயரில் ரூ.2 கோடி மோசடி; பா.ஜ.க. தேசிய செயலாளர் மீது வழக்கு பதிவு + "||" + Cheating case against BJP leader Muralidhar Rao, 8 others

நிர்மலா சீதாராமன் பெயரில் ரூ.2 கோடி மோசடி; பா.ஜ.க. தேசிய செயலாளர் மீது வழக்கு பதிவு

நிர்மலா சீதாராமன் பெயரில் ரூ.2 கோடி மோசடி; பா.ஜ.க. தேசிய செயலாளர் மீது வழக்கு பதிவு
நிர்மலா சீதாராமன் பெயரில் ரூ.2 கோடி மோசடி செய்துள்ளார் என பா.ஜ.க. தேசிய செயலாளர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.
மத்திய பாதுகாப்பு துறை மந்திரியாக நிர்மலா சீதாராமன் பதவி வகித்து வருகிறார்.  இவரது கையெழுத்திட்ட கடிதத்தினை காண்பித்து அரசு பணி வாங்கி தருகிறோம் என கூறி ரூ.2.17 கோடி அளவில் மோசடியில் ஈடுபட்டு உள்ளார் என பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் முரளிதர ராவ் மற்றும் 8 பேர் மீது பெண் ஒருவர் போலீசில் புகார் தெரிவித்து உள்ளார்.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பார்மா எக்சில் என்ற நிறுவனத்தின் தலைவராக தனது கணவரை நியமனம் செய்வதற்காக இந்த பணம் பெறப்பட்டு உள்ளது.

ஆனால் பணி நியமனம் வழங்கப்படாத நிலையில், பணமும் திருப்பி தரப்படவில்லை.  இதனை தொடர்ந்து முரளிதர ராவ் உள்ளிட்டோர் மிரட்ட தொடங்கினர் என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நீதிமன்றம் அளித்த பரிந்துரையின்பேரிலான புகாரின் மீது மோசடி, குற்ற வழக்கு மற்றும் ஐ.பி.சி.யின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  எனினும், இந்த குற்றச்சாட்டுகளை முரளிதர ராவ் மறுத்துள்ளார்.  கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ஜ.க. எச்சரிக்கை விடுத்துள்ளது.