வழக்கில் இருந்து தப்பிக்க தன்னை போல் தோற்றம் கொண்டவரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை


வழக்கில் இருந்து தப்பிக்க தன்னை போல் தோற்றம் கொண்டவரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 29 March 2019 1:11 AM GMT (Updated: 29 March 2019 4:41 AM GMT)

குண்டு வெடிப்பு வழக்கில் தப்பிக்க தன்னையொத்த தோற்றம் கொண்ட நபரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

மகாராஷ்டிராவின் மும்பை நகரில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கொன்றின் குற்றவாளி சையது முஸ்டிக் வஹியுதீன் கடாரி என்ற இம்ரான் அபு மன்சூர் ஹசானி (வயது 61).

இவரை போலவே தோற்றம் கொண்டவர் வஹாப் பங்கர்வல்லா.  இந்த நிலையில் கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்டு 15ந்தேதி மீரா சாலையில் உள்ள வாடகை குடியிருப்பு ஒன்றில் வைத்து வஹாப் கொல்லப்பட்டார்.

குண்டு வெடிப்பு வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக கடாரி இந்த கொலையை செய்துள்ளார்.  பின் அவரது தலையை துண்டித்து சாக்கடையில் வீசியுள்ளார்.  மீதமிருந்த உடலை எரித்து விட்டார்.  இதனால் கடாரி இறந்து விட்டார் என மற்றவர்களுக்கு காண்பிக்க முயற்சி செய்துள்ளார்.

இதன்பின்னர் அங்கிருந்து தப்பியோடி வேறொரு அடையாளத்தில் மருத்துவர் ஒருவரிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.  பின் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.  அவருக்கு நீதிபதி பத்வர்தன் ரூ.5 ஆயிரம் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

Next Story