வங்கிகள் இணைப்புக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு


வங்கிகள் இணைப்புக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 29 March 2019 11:15 PM GMT (Updated: 29 March 2019 10:00 PM GMT)

வங்கிகள் இணைப்புக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.

புதுடெல்லி,

பரோடா வங்கியுடன் விஜயா, தேனா வங்கிகளை இணைப்பதற்கு மத்திய அரசு கொள்கை அளவில் முடிவு எடுத்தது. இதற்கு பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. 3 வங்கிகள் இணைப்பு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு நீதிபதிகள் நாரிமன், வினீத் சரண் ஆகியோர் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வங்கி ஊழியர் சங்கங்கள் தரப்பில், 3 வங்கிகளை இணைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வங்கிகள் இணைப்பு நடவடிக்கைக்கு தடை விதிக்க மறுத்ததுடன், அந்த மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.


Next Story