தேசிய செய்திகள்

அடல்ஜி, அத்வானிஜிக்கு உரிய மரியாதை கட்சியில் வழங்கப்படவில்லை; நடிகை சோனாக்சி சின்ஹா + "||" + Atal ji, Advani ji entire group hasn't been given the respect they deserve; Sonakshi Sinha

அடல்ஜி, அத்வானிஜிக்கு உரிய மரியாதை கட்சியில் வழங்கப்படவில்லை; நடிகை சோனாக்சி சின்ஹா

அடல்ஜி, அத்வானிஜிக்கு உரிய மரியாதை கட்சியில் வழங்கப்படவில்லை; நடிகை சோனாக்சி சின்ஹா
அடல்ஜி, அத்வானிஜி மற்றும் ஜே.பி. நாராயண்ஜிக்கு உரிய மரியாதை கட்சியில் வழங்கப்படவில்லை என பிரபல இந்தி திரைப்பட நடிகை சோனாக்சி சின்ஹா கூறியுள்ளார்.
புதுடெல்லி,

நடிகர் சத்ருகன் சின்ஹா 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.  முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் மந்திரியாக பதவி வகித்தவர்.  சமீபத்தில் பா.ஜ.க.வில் இருந்து விலகினார்.  வருகிற 6ந்தேதி காங்கிரசில் இணைகிறார்.  இதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்.

இதுபற்றி அவரது மகளான நடிகை சோனாக்சி சின்ஹா கூறும்பொழுது, இது அவரது முடிவு.  சில இடங்களில் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லையெனில், ஒரு மாற்றத்தினை நீங்கள் கொண்டு வரவேண்டும் என நான் நினைக்கிறேன்.  அதனை அவர் செய்துள்ளார்.

காங்கிரசுடனான இந்த புதிய தொடர்பில், நசுக்கப்படும் உணர்வில்லாமல் இன்னும் அதிக நல்ல பணிகளை அவரால் ஆற்ற முடியும் என நான் நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

இதன்பின் அவர், தொடக்கத்தில் இருந்தே கட்சியின் ஓர் உறுப்பினராக, ஜே.பி. நாராயண்ஜி, அடல்ஜி மற்றும் அத்வானிஜி காலத்தில் இருந்தே எனது தந்தைக்கு கட்சிக்குள் நிறைய மரியாதை இருந்தது.  இந்த மொத்த குழுவுக்கும் அவர்களின் தகுதிக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என நான் உணர்கிறேன்.  மிக காலதாமதமுடன் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.  முன்பே இதனை எடுத்திருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் இந்திரா பவன்; டிசம்பர் 28ல் திறப்பு விழா
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகத்திற்கு வருகிற டிசம்பர் 28ந்தேதி திறப்பு விழா நடத்தப்படுகிறது.
2. ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் காங்கிரஸ் கட்சியினர் சாலைமறியல் - போக்குவரத்து பாதிப்பு
ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் காங்கிரஸ் கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
3. “காங்கிரஸ் கட்சி, தலை இல்லாத கோழி” - அருண் ஜெட்லி வர்ணனை
காங்கிரஸ் கட்சி, தலை இல்லாத கோழி என்று முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி வர்ணித்துள்ளார்.
4. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங் எம்.பி. ராஜினாமா - பா.ஜனதாவில் இணைகிறார்
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங் எம்.பி. தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், பா.ஜனதாவில் இணைய உள்ளதாகவும் தெரிவித்தார்.
5. “காங்கிரஸ் கட்சியின் புதிய நாடகம்” - ராகுல் காந்தி ராஜினாமா பற்றி பா.ஜனதா கருத்து
காங்கிரஸ் கட்சியின் புதிய நாடகம் என ராகுல் காந்தி ராஜினாமா பற்றி பா.ஜனதா கருத்து தெரிவித்துள்ளது.