தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் 74 தொகுதிகளை பா.ஜனதா கைப்பற்றும்: யோகி ஆதித்யநாத் நம்பிக்கை + "||" + Will win more than 74 LS seats in UP, claims Chief Minister Yogi Adityanath

உத்தரபிரதேசத்தில் 74 தொகுதிகளை பா.ஜனதா கைப்பற்றும்: யோகி ஆதித்யநாத் நம்பிக்கை

உத்தரபிரதேசத்தில் 74 தொகுதிகளை பா.ஜனதா கைப்பற்றும்: யோகி ஆதித்யநாத் நம்பிக்கை
உத்தரபிரதேசத்தில் 74 தொகுதிகளை பா.ஜனதா கைப்பற்றும் என்று அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்தார்.
லக்னோ, 

உத்தரபிரதேசத்தில் எலியும் பூனையுமாக இருந்து வந்த சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் சமீப காலமாக கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலிலும் ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியுடன் இணைந்து உத்தரபிரதேசத்தில் மகா கூட்டணியை உருவாக்கி இருக்கின்றன.

இந்த கூட்டணியின் உறுதித்தன்மை குறித்து மாநில முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத் விமர்சித்து உள்ளார். இது தொடர்பாக லக்னோவில்  அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘சமாஜ்வாடி–பகுஜன் சமாஜ் மகா கூட்டணி எதிரெதிர் கட்சிகளின் கூட்டணி. அதனால் வெற்றி பெற முடியாது. ஏனெனில் மக்கள் அவர்களை ஏற்க போவதில்லை. எண்ணெயும் தண்ணீரும் எப்படி கலக்கும்?’ என்று கேள்வி எழுப்பினார்.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் நாடு வளர்ச்சியடைந்து இருப்பதுடன், உலக அளவில் மிகப்பெரும் சக்தியாக உருமாறி இருப்பதாக கூறிய யோகி ஆதித்யநாத், ஒரு வலிமையான, வளமான இந்தியாவை விரும்புபவர்கள் மோடியை 2–வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்க ஆதரிக்கிறார்கள் என்றும் கூறினார். உத்தரபிரதேசத்தில் 74 தொகுதிகளை பா.ஜனதா கைப்பற்றும் என்றும் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. சி.பி.ஐ. கமிஷ்னர் என்று ஏமாற்றி சோதனை நடத்தியவர் கைது
உத்தரபிரதேசம் மாநிலத்தில் சி.பி.ஐ. கமிஷ்னராக ஏமாற்றி சோதனை நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2. யோகி ஆதித்யநாத்தை இழிவுபடுத்தியதாக கைதான பத்திரிகையாளருக்கு உடனடி ஜாமீன் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
யோகி ஆதித்யநாத்தை இழிவுபடுத்தியதாக கைதான பத்திரிகையாளருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
3. யோகி ஆதித்யநாத்திற்கு எதிரான அவதூறு கருத்து; கொலை குற்றமா என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
உத்தரபிரதேசத்தில் பத்திரிக்கையாளர் பிரசாந்த் கனோஜியாவை 11 நாள் நீதிமன்றக் காவலில் வைத்ததற்கு சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.
4. முகாம் அமைத்து ஏப்ரல் 11-ம் தேதியிலிருந்து வாக்கு இயந்திரங்களை கண்காணிக்கும் வேட்பாளர்...!
உ.பி.யில் முகாம் அமைத்து ஏப்ரல் 11-ம் தேதியிலிருந்து வாக்கு இயந்திரங்களை வேட்பாளர் ஒருவர் கண்காணித்து வருகிறார்.
5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தொடர்பாக ஆலோசிக்க அகிலேஷ் யாதவுடன் மாயாவதி சந்திப்பு
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தொடர்பாக ஆலோசிக்க அகிலேஷ் யாதவை மாயாவதி சந்தித்து பேசியுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...