துபாயில் இருந்து மும்பைக்கு கடத்தல்: 106 கிலோ தங்கம் பறிமுதல் - 7 பேர் கும்பல் கைது


துபாயில் இருந்து மும்பைக்கு கடத்தல்: 106 கிலோ தங்கம் பறிமுதல் - 7 பேர் கும்பல் கைது
x
தினத்தந்தி 30 March 2019 9:15 PM GMT (Updated: 30 March 2019 9:05 PM GMT)

துபாயில் இருந்து மும்பைக்கு கடத்தி வரப்பட்ட 106 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 7 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டது.

மும்பை,

மும்பை, டோங்கிரி பகுதிக்கு வெளிநாட்டில் இருந்து தங்கம் அதிக அளவில் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு கண்காணிப்பில் ஈடுபட்ட அதிகாரிகள் ஒரு கார், மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை போட்டனர்.

அதில், அதிக அளவில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் 75 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.24 கோடி என்பது தெரியவந்தது. இதையடுத்து கார், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த அப்துல் (வயது 26), சேக் ஆகாத் (32) உள்பட 7 பேரை கைது செய்தனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் அதிகாரிகள் நடத்திய சோதனையிலும் ஏராளமான தங்கம் மற்றும் பணம் சிக்கியது. இந்த கடத்தல் கும்பலிடம் இருந்து மொத்தமாக ரூ.32 கோடி மதிப்பிலான 106 கிலோ தங்கம் மற்றும் ரூ.1 கோடியே 81 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Next Story