குஜராத்தில் மேலும் 4 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர் அறிவிப்பு


குஜராத்தில் மேலும் 4 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர் அறிவிப்பு
x
தினத்தந்தி 31 March 2019 6:30 PM GMT (Updated: 31 March 2019 5:05 PM GMT)

குஜராத்தில் மேலும் 4 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆமதாபாத்,

குஜராத்தில் மொத்தமுள்ள 26 நாடாளுமன்ற தொகுதிகளில் 19 இடங்களுக்கான வேட்பாளர்களை பா.ஜனதா ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதைத்தொடர்ந்து மேலும் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர்.

இதில் கெராலு தொகுதி எம்.எல்.ஏ. பரத்சின் தாபி (படான்), மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் கீதா ரத்வா (சோட்டா உதேபூர்), பா.ஜனதா மாவட்ட பொருளாளர் மிதேஷ் படேல் (ஆனந்த்) ஆகிய 3 புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த 3 தொகுதிகளை சேர்ந்த தற்போதைய எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேநேரம் ஜுனாகத் தொகுதி எம்.பி.யான ராஜேஷ் சுதசமாவுக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த 4 தொகுதிகளையும் சேர்த்து குஜராத்தில் மொத்தம் 23 தொகுதிகளுக்கு இதுவரை பா.ஜனதா வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் 4 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story