கேரளாவில் கடுமையான வெயில்: பெண் உள்பட 2 பேர் பலி


கேரளாவில் கடுமையான வெயில்: பெண் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 1 April 2019 2:24 AM IST (Updated: 1 April 2019 2:24 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் கடுமையான வெயில் காரணமாக பெண் உள்பட 2 பேர் பலியாயினர்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. நேற்று கடுமையான வெயிலை தாங்க முடியாமல் பாரசாலா அருகே உள்ள முறியதோட்டம் ஊரை சேர்ந்த விவசாயி உன்னி கிருஷ்ணன் மற்றும் பாலக்காடு மாவட்டம் நல்லூரைச் சேர்ந்த பெண் தொழிலாளி சின்னமாலூ ஆகிய 2 பேரும் சுருண்டு விழுந்து செத்தனர்.

சுட்டெரித்த வெயில் காரணமாக கோழிக்கோட்டில் 15 பேர், கண்ணூரில் 10 பேர், கொல்லத்தில் 11 பேர், ஆலப்புழாவில் 8 பேர் என மொத்தம் 44 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.


Next Story