பாலகோட் தாக்குதலில் ஆதாயம் தேடும் மோடி அரசு புல்வாமா தாக்குதலுக்கும் பொறுப்பேற்க வேண்டும் - தெலுங்குதேசம் சொல்கிறது


பாலகோட் தாக்குதலில் ஆதாயம் தேடும் மோடி அரசு புல்வாமா தாக்குதலுக்கும் பொறுப்பேற்க வேண்டும் - தெலுங்குதேசம் சொல்கிறது
x
தினத்தந்தி 1 April 2019 3:15 AM IST (Updated: 1 April 2019 3:01 AM IST)
t-max-icont-min-icon

பாலகோட் தாக்குதலில் ஆதாயம் தேடும் மோடி அரசு, புல்வாமா தாக்குதலுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என தெலுங்குதேசம் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

விசாகப்பட்டினம்,

தெலுங்குதேசம் கட்சியின் செய்தி தொடர்பாளர் தினகர் லங்கா கூறியதாவது:-

காஷ்மீர் புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு மத்திய அரசின் அஜாக்கிரதையே காரணம். ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் 2017-ம் ஆண்டே மத்திய ஆயுதப்படை போலீசாருக்கு குண்டு துளைக்காத பஸ்கள் வழங்குவதை தொடங்கி வைத்தார். தற்போது ராணுவ அமைச்சகத்தில் அதுபோன்ற 200 பஸ்கள் உள்ளன. ஆனால் இன்னும் அந்த படைகளுக்கு அவை கிடைக்கவில்லை. அந்த பஸ்கள் எங்கே?

பாகிஸ்தான் பாலகோட் பகுதியில் நடந்த வான் தாக்குதலை உடனடியாக தனது ஆதாயத்துக்கு பயன்படுத்திய மோடி அரசு, காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கும் பொறுப்பேற்க வேண்டும். பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு தவறிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story