தமிழகத்துக்கான தண்ணீரை தடுத்து நிறுத்தியவர் தேவகவுடா: கர்நாடக முதல் அமைச்சர் பரபரப்பு பேட்டி


தமிழகத்துக்கான தண்ணீரை தடுத்து நிறுத்தியவர் தேவகவுடா: கர்நாடக முதல் அமைச்சர் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 1 April 2019 8:58 PM IST (Updated: 1 April 2019 8:58 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்திற்கு தாராளமாக சென்று கொண்டிருந்த தண்ணீரை தடுத்து நிறுத்தியவர் முன்னாள் பிரதமர் தேவகவுடா என அவரது மகன் மற்றும் கர்நாடக முதல் அமைச்சரான குமாரசாமி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், ஹேமாவதி அணை நீரை தும்கூர் மாவட்டத்திற்கு திருப்பி விட முயற்சிக்காத தேவகவுடாவை, தும்கூர் மக்கள் இந்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என சிலர் பேசினர்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் மற்றும் கர்நாடக முதல் அமைச்சரான குமாரசாமி, தமிழகத்திற்கு தாராளமாக தண்ணீர் தர முன்னாள் முதல்வர் நிஜலிங்கப்பா தயாராக இருந்ததாக தெரிவித்தார்.

அவரை எதிர்த்து சட்டமன்றத்தில் போராட்டம் நடத்தி தான் ஹேமாவதி அணை கட்டப்பட்டது.  தமிழகத்திற்கு தாராளமாக சென்று கொண்டிருந்த தண்ணீரை தடுப்பதற்காகவே தேவகவுடா போராடி ஹேமாவதி அணையை கட்டினார் என்று சூசகமுடன் கூறினார்.

Next Story