இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயற்சி: தனிக்கோர்ட்டு விசாரணைக்கு தடை நீட்டிப்பு - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு


இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயற்சி: தனிக்கோர்ட்டு விசாரணைக்கு தடை நீட்டிப்பு - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 1 April 2019 9:00 PM GMT (Updated: 1 April 2019 8:56 PM GMT)

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயற்சி தொடர்பாக, தனிக்கோர்ட்டு விசாரணைக்கு ஜூலை 26-ந் தேதி வரை தடையை நீட்டித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

இரட்டை இலை சின்னத்தை பெற டி.டி.வி.தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கு, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் தனிக்கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என்றும், எனவே பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் டி.டி.வி.தினகரன், பி.குமார் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த மனு டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதி ஏ.கே.பாதக் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனிக்கோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை ஜூலை 26-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story