சிறையில் இருந்து லாலு தொலைபேசியில் பேசுகிறாரா? - நிதிஷ் குமார் கிளப்பிய சர்ச்சை


சிறையில் இருந்து லாலு தொலைபேசியில் பேசுகிறாரா? - நிதிஷ் குமார் கிளப்பிய சர்ச்சை
x
தினத்தந்தி 2 April 2019 8:45 PM GMT (Updated: 2 April 2019 8:23 PM GMT)

சிறையில் இருந்து லாலு தொலைபேசியில் பேசுகிறார் என நிதிஷ் குமார் சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

பாட்னா,

பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத், கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, ஜார்கண்ட் மாநிலத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் உடல்நலக்குறைவால் ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் தண்டனையை அனுபவித்து வருகிற நிலையில், தனக்கு நெருக்கமானவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். இது சிறைத்தண்டனை விதிகளை மீறிய செயல் என பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் குற்றம் சாட்டி சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

ஆனால் இதை லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், “என் தந்தையுடன் நான் பேசி ஒரு மாதத்துக்கு மேலாகி விட்டது. சனிக்கிழமைகளில் சிறை விதிகளின்படி அவரை மக்கள் சந்திக்கின்றனர், நாடாளுமன்ற தேர்தலில் அடி வாங்குவோம் என்ற பயத்தில் இப்படி ஆதாரமற்ற குற்றசாட்டை நிதிஷ் குமார் கூறுகிறார்” என குறிப்பிட்டார்.

Next Story