ராஜஸ்தான் கவர்னர், தேர்தல் விதிமுறைகளை மீறினார் - ஜனாதிபதியிடம், தேர்தல் கமிஷன் புகார்
ராஜஸ்தான் கவர்னர், தேர்தல் விதிமுறைகளை மீறினார் என ஜனாதிபதியிடம், தேர்தல் கமிஷன் புகார் அளித்துள்ளது.
புதுடெல்லி,
ராஜஸ்தான் கவர்னர் கல்யாண் சிங் தன் வீட்டில் கடந்த மாதம் 23-ந் தேதி பா.ஜ.க. நிர்வாகிகளுடன் பேசுகையில், “நாம் அனைவரும் பா.ஜ.க தொண்டர்கள். நம் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். மோடி பிரதமராவது காலத்தின் கட்டாயம்” என கூறியிருந்தார்.
அரசு உயர் பதவியில் இருப்பவர் அரசியல் பேசியது தேர்தல் விதிமுறை மீறல் என எதிர்க்கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்தன. இதை பரிசீலித்த தேர்தல் கமிஷன், கல்யாண் சிங் பேசியது தேர்தல் விதிமுறை மீறல் என உறுதி செய்தது. இது தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு, தேர்தல் கமிஷன் புகார் கடிதம் அனுப்பி உள்ளது.
பா.ஜ.க.வை சேர்ந்த கல்யாண் சிங், உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரியாக பதவி வகித்து உள்ளார்.
இதேபோல் 1990-களில் இமாசல பிரதேச கவர்னர் குல்சர் அகமது தன் மகனுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தார். தேர்தல் விதிமுறையை மீறியதாக தேர்தல் கமிஷன் கூறியதால், அவர் உடனே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story