திகார் சிறையில் கைதிகளுக்கு செல்போன், போதைப் பொருள் சப்ளை: தமிழக காவலர் பணிநீக்கம்

டெல்லி திகார் சிறையில் கைதிகளுக்கு செல்போன், போதைப் பொருள் சப்ளை செய்ததாக தமிழக காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி திகார் சிறையில் கைதிகளுக்கு செல்போன், போதைப்பொருள் சப்ளை செய்ததாக தமிழக காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
தமிழக காவல்துறையை சேர்ந்த சிறப்புக் காவலர் அன்பரசனை பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திகார் சிறையில் கைதிகள் செல்போன், போதைப்பொருள் பயன்படுத்துவதாக எழுந்த புகாரை அடுத்து சோதனை நடத்தப்பட்டது. சிறைத்துறையினர் நடத்திய சோதனையில் 15 க்கும் மேற்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிறையிலுள்ள கேமராக்களை ஆய்வு செய்ததில் காவலர் அன்பரசன் செல்போன் சப்ளை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைதிகளின் உறவினர்களிடம் ரூ.25,000 முதல் 1 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு செல்போன் சப்ளை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story






