தேர்தல் கமிஷன் ஒப்புதல் வழங்கியது: ‘நரேந்திர மோடி’ சினிமா நாளை வெளியாகிறது


தேர்தல் கமிஷன் ஒப்புதல் வழங்கியது: ‘நரேந்திர மோடி’ சினிமா நாளை வெளியாகிறது
x
தினத்தந்தி 4 April 2019 4:45 AM IST (Updated: 4 April 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

‘பி.எம்.நரேந்திர மோடி’ சினிமா நாளை உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை, ‘பி.எம்.நரேந்திர மோடி’ என்ற பெயரில் இந்தி திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சாமானியன், பிரதமராவதுதான் படத்தின் கதை.

ஓமங்க் குமார் இயக்கத்தில் தயாராகி உள்ள இந்த படத்தில் பிரதமர் நரேந்திர மோடி வேடத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். அமித் ஷா வேடத்தில் மனோஜ் ஜோஷி தோன்றுகிறார்.

இந்த படம் நாளை (5-ந் தேதி) வெளியாகிறது.

இந்த படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிடுவது அந்த கட்சிக்கு அரசியல் லாபத்தை தரும் என கருதி, படத்தின் வெளியீட்டை தள்ளிப்போட உத்தரவிடுமாறு மும்பை கோர்ட்டில் எதிர்க்கட்சிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த படத்தின் வெளியீடு, தேர்தல் நடைமுறை விதிகளுக்கு எதிரானது என கூறப்பட்டது. ஆனால் இதை தேர்தல் கமிஷன், கோர்ட்டில் நிராகரித்தது. இந்த படத்தை திட்டமிட்டபடி வெளியிட ஒப்புதல் வழங்கி உள்ளது. இதையடுத்து வழக்கை மும்பை கோர்ட்டு முடிவுக்கு கொண்டு வந்தது. எனவே திட்டமிட்டபடி இந்த படம் நாளை (5-ந் தேதி) உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தியில் இந்த படம் எடுக்கப்பட்டிருந்தாலும், 23 மொழிகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Next Story