நகரி தொகுதியில் நடிகை ரோஜாவுக்கு ஆதரவாக தமிழக நடிகர்கள் பிரசாரம்
நகரி தொகுதியில் நடிகை ரோஜாவுக்கு ஆதரவாக தமிழக நடிகர்கள் பிரசாரம்
நகரி,
நடிகை ரோஜா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். தமிழக எல்லையையொட்டி அமைந்துள்ள இந்த தொகுதியில் 50 சதவீதம் பேர் தமிழர்களே உள்ளனர். இந்த தொகுதியில் ரோஜா தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் ரோஜாவுக்கு ஆதரவாக தமிழக நகைச்சுவை நடிகர்கள் வெங்கல்ராவ், முத்துக்காளை, திருப்பாச்சி பெஞ்சமின் ஆகியோர் தமிழர்கள் அதிகம் உள்ள ஏகாம்பரகுப்பம், புதுப்பேட்டை, சத்திரவாடா பகுதிகளில் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்தனர். தமிழில் நகைச்சுவையாக பேசி அங்குள்ள பொதுமக்களை அவர்கள் கவர்ந்தனர்.
Related Tags :
Next Story