தேசிய செய்திகள்

சத்ருகன்சின்கா காங்கிரசில் இணைந்தார்! பாஜக ஒருவரின் கட்சி என விமர்சனம் + "||" + Lok Sabha elections 2019: Shatrughan Sinha joins Congress, says BJP is a ‘one-man party’

சத்ருகன்சின்கா காங்கிரசில் இணைந்தார்! பாஜக ஒருவரின் கட்சி என விமர்சனம்

சத்ருகன்சின்கா காங்கிரசில் இணைந்தார்! பாஜக ஒருவரின் கட்சி என விமர்சனம்
பாஜகவில் இருந்து விலகிய சத்ருகன் சின்கா, காங்கிரஸ் கட்சியில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
புதுடெல்லி,

பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.பியாக தேர்வான சத்ருகன் சின்கா, அக்கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்தார். பிரதமர் மோடிக்கு எதிராக அவ்வப்போது கடுமையான கருத்துக்களையும் வெளியிட்டு வந்த சத்ருகன் சின்கா, சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணையப் போவதாக அறிவித்து இருந்தார். கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் சத்ருகன் சின்கா சந்தித்து பேசினார். 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கேசி வேணுகோபால் முன்னிலையில், அக்கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் இணைந்த சத்ருகன் சின்கா, பாஜக ஒருவரின் கட்சி எனவும் விமர்சித்தார். சத்ருகன் சின்கா, பாட்னா சாகிப் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவார் என தெரிகிறது. இந்த தொகுதியில், பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் போட்டியிடுகிறார்.  


தொடர்புடைய செய்திகள்

1. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து
பாஜக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
2. மாபெரும் வெற்றியை நோக்கி பாஜக : நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் உற்சாகம்
மாபெரும் வெற்றியை நோக்கி பாஜக சென்று கொண்டிருப்பதால், நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
3. மத்திய பிரதேச சட்டசபையில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்; பா.ஜ.க. கோரிக்கை
மத்திய பிரதேச சட்டசபையில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பா.ஜ.க. இன்று கோரிக்கை விடுத்துள்ளது.
4. 15வது மக்களவை தேர்தல்; 2வது முறையாக ஆட்சியை பிடித்த காங்கிரஸ் கட்சி
நாட்டின் 15வது மக்களவை தேர்தலில் 2வது முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது.
5. 14வது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது
இந்தியாவில் நடந்த 14வது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது.