காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர் பலி


காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர் பலி
x
தினத்தந்தி 6 April 2019 12:58 PM GMT (Updated: 6 April 2019 12:58 PM GMT)

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் பலியாகி உள்ளார்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோப்பூர் நகரில் வார்போரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டு உள்ளார்.  அவர் முகமது ரபி யாட்டூ என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் இமாம் சாஹிப் பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை பிடிப்பதற்காக பாதுகாப்பு படையினர் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில் இரு தரப்பினருக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.  இந்நிலையில், காஷ்மீரின் சோப்பூர் பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டு உள்ளார்.

Next Story