பாலகோட் தாக்குதலின்போது மூடப்பட்ட வான்வழித்தடத்தை பாகிஸ்தான் திறந்தது
பாலகோட் தாக்குதலின்போது மூடப்பட்ட வான்வழித்தடத்தை பாகிஸ்தான் திறந்தது
புதுடெல்லி,
பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்தியா பிப்ரவரி 26–ந் தேதி வான்தாக்குதல் நடத்திய பின்னர் மேற்கு பகுதி விமானங்களுக்கான தனது வான் வழித்தடத்தை பாகிஸ்தான் முழுவதுமாக மூடியது. இதனால் டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் சுற்றிக்கொண்டு சென்றதால் கூடுதல் செலவு ஆனது.
மேலும் நியூயார்க்–டெல்லி இடையேயான அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் 2 வாரத்துக்கு தனது போக்குவரத்தை நிறுத்தியது. இந்நிலையில் மார்ச் 27–ந் தேதி பாகிஸ்தான் தனது வான் வழித்தடத்தை திறந்தது. ஆனாலும் டெல்லி, பாங்காக், கோலாலம்பூர் தவிர மற்ற விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இப்போது தனது 11 மேற்கு பகுதி வான் வழித்தடங்களில் ஒரு வழித்தடத்தை கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் திறந்தது. இதனை ஏர் இந்தியா மற்றும் துருக்கி ஏர்லைன்ஸ் விமானங்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story