டெல்லி பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து


டெல்லி பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
x
தினத்தந்தி 7 April 2019 7:09 AM IST (Updated: 7 April 2019 7:36 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பெரிய அளவில் ஏற்பட்ட தீயை அணைக்க 22 தீயணைப்பு வாகனங்கள் சென்றுள்ளன.

புதுடெல்லி,

வடக்கு டெல்லியின் நரேலா தொழிற்பகுதியில் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்று அமைந்து உள்ளது.  இங்கு அதிகாலை வேளையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  இதுபற்றிய தகவல் அறிந்து 22 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி தெரியவரவில்லை.

கடந்த மாதம், மத்திய டெல்லியில் அரசு அலுவலகங்கள் நிறைந்த கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதுகாவலர் ஒருவர் சிக்கி பலியானார்.  இதற்கு ஒரு மாதத்திற்கு முன் கரோல் பாக் பகுதியில் ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட பெரிய அளவிலான தீ விபத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

Next Story