ராஜ்தானி விரைவு ரெயிலில் வழங்கிய உணவை சாப்பிட்ட 20 பயணிகளுக்கு உடல்நலம் பாதிப்பு


ராஜ்தானி விரைவு ரெயிலில் வழங்கிய உணவை சாப்பிட்ட 20 பயணிகளுக்கு உடல்நலம் பாதிப்பு
x
தினத்தந்தி 7 April 2019 2:40 PM IST (Updated: 7 April 2019 3:11 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி - புவனேஷ்வர் ராஜ்தானி விரைவு ரெயிலில் வழங்கிய உணவை சாப்பிட்ட 20 பயணிகளுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் கோமாக் ரெயில் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவர் ஒருவர் பயணிகளுடன் பயணம் செய்தார் என ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெயில்வேயில் வழங்கப்பட்ட உணவை ஆய்வு செய்ய மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசியும் மாதிரிகளை சேகரித்துள்ளது.



1 More update

Next Story