காங்கிரசுக்கு வாக்களிப்பது பயங்கரவாதத்தை வலுப்படுத்தும் - யோகி ஆதித்யநாத்
காங்கிரசுக்கு வாக்களிப்பது பயங்கரவாதத்தை வலுப்படுத்தும் என யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.
காங்கிரசுக்கு வாக்களிப்பது பயங்கரவாதத்தை வலுப்படுத்தும் என யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.
தெலுங்கானாவில் பிரசாரம் செய்த உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியை கடுமையாக விமர்சனம் செய்தார். யோகி ஆதித்யநாத் பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது என்பது பயங்கரவாதம், நக்சலைட் மற்றும் பிரிவினைவாத அமைப்புகளை வலுப்படுத்தும், வளர்ச்சிக்கு தடையை ஏற்படுத்தும். இதுபோன்றுதான் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சிக்கு வாக்களிப்பதும். அசாருதீன் ஓவைசி போன்றவர்களின் கைகளையே வலுப்படுத்தும்.
பிரதமர் மோடியின் தலைமையிலான பா.ஜனதா அரசுக்கு ஆதரவாக வாக்களித்தால் தேசம் வளர்ச்சியடையும், இந்தியா சூப்பர் பவர் தேசமாகும் என கூறியுள்ளார்.
முன்பு இருந்த காங்கிரஸ் அரசு பயங்கரவாதிகளுக்கு பிரியாணியை வழங்கியது, ஆனால் மோடி அரசு பயங்கரவாதிகளுக்கு துப்பாக்கியால் பதிலடியை கொடுத்தது.
Related Tags :
Next Story