2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு அதிக ஓட்டு


2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு அதிக ஓட்டு
x
தினத்தந்தி 7 April 2019 8:49 PM GMT (Updated: 7 April 2019 8:49 PM GMT)

2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவே அதிக ஓட்டு பெற்றிருந்தது தெரிய வந்துள்ளது.

புதுடெல்லி,

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற 16-வது மக்களவை தேர்தல்களில், ஓட்டு சதவீதப்படி பா.ஜனதா அதிக ஓட்டுகள் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. அப்போது, மொத்த வாக்காளர்கள் 83 கோடியே 40 லட்சமாக இருந்தனர். அதில், பதிவாகிய செல்லத்தக்க ஓட்டுகள் 54 கோடியே 78 லட்சம். இந்த ஓட்டுகளில், பா.ஜனதா 31.34 சதவீத ஓட்டுகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி, 19.52 சதவீத ஓட்டுகள் பெற்றுள்ளது. தேசிய கட்சிகளில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மிகக்குறைந்த அளவாக 0.79 சதவீத ஓட்டுகள் பெற்றுள்ளது.

மொத்த வாக்காளர்களை கணக்கில் கொண்டு பார்த்தாலும், ஓட்டு சதவீதத்தில் பா.ஜனதாவே முதலிடத்தில் இருந்தது. வெற்றி பெற்ற தொகுதிகள் அடிப்படையிலும், 282 தொகுதிகளில் வென்று முதலிடத்தை பிடித்தது.

6 தேசிய கட்சிகள் பெற்ற மொத்த ஓட்டுகள் 60.70 சதவீதம் ஆகும். அக்கட்சிகள் சார்பில் மொத்தம் 1,591 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் 342 பேர் வெற்றி பெற்றனர். 807 பேர் டெபாசிட் இழந்தனர். 28 பேர், 10 ஆயிரத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். லடாக் தொகுதியில், பா.ஜனதா வேட்பாளர் வெறும் 36 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


Next Story