‘நான் பாரதீய ஜனதாவில் இருக்கிறேன்’ - வருமான வரிசோதனையில் சிக்கியவர் சொல்கிறார்


‘நான் பாரதீய ஜனதாவில் இருக்கிறேன்’ - வருமான வரிசோதனையில் சிக்கியவர் சொல்கிறார்
x
தினத்தந்தி 8 April 2019 3:47 AM IST (Updated: 8 April 2019 3:47 AM IST)
t-max-icont-min-icon

நான் பாரதீய ஜனதாவில் இருக்கிறேன் என வருமான வரிசோதனையில் சிக்கியவர் கூறினார்.

போபால்,

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்தியபிரதேச முதல்-மந்திரி கமல்நாத்துக்கு நெருக்கமானவர்கள் மற்றும் உறவினர்கள் ‘ஹவாலா’ பண பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தன. அவர்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இதையடுத்து, நேற்று அதிகாலை கமல்நாத்துக்கு நெருக்கமானவர்களை குறிவைத்து வருமான வரி சோதனை தொடங்கியது. டெல்லி, மத்தியபிரதேச மாநிலம் போபால், இந்தூர் ஆகிய நகரங்களில் சுமார் 50 இடங்களில் சோதனை நடைபெற்றது.

குறிப்பாக, கமல்நாத்தின் முன்னாள் சிறப்பு அதிகாரி பிரவீன் காக்கர் தொடர்புடைய இடங்களில் டெல்லியில் இருந்து வந்த வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக, எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து சோதனை நடத்தப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.

இந்த சோதனையில் போபாலை சேர்ந்த தொழில் அதிபர் அஸ்வின் சர்மா வீடும் சிக்கியது. அப்போது கமல்நாத், காக்கர் தொடர்பு குறித்து கேட்டபோது, நான் பா.ஜனதா கட்சியில் இருக்கிறேன் என்ற தகவலை வெளியிட்டு கேள்வி கேட்டவர்களை அவர் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.


Next Story