வாரணாசி தொகுதியில் மோடி 26-ந் தேதி வேட்பு மனுதாக்கல்


வாரணாசி தொகுதியில் மோடி 26-ந் தேதி வேட்பு மனுதாக்கல்
x
தினத்தந்தி 8 April 2019 4:30 AM IST (Updated: 8 April 2019 3:59 AM IST)
t-max-icont-min-icon

வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி 26-ந் தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ளார்.

வாரணாசி,

பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் கடைசி கட்டமாக மே 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் அந்த தொகுதியில் 26-ந் தேதி பிரதமர் மோடி வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக அவர் 25-ந் தேதி வாரணாசி செல்கிறார். அன்று சாலை வழியாக சென்று மக்களை சந்தித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார். 26-ந் தேதி காலையில் காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்து விட்டு அதன் பிறகு வேட்பு மனுவை தாக்கல் செய்ய செல்கிறார்.

நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கலின் போது பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், நிதின் கட்காரி மற்றும் மாநில மந்திரிகள் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் செல்கின்றனர். வாரணாசிக்கு வருவதற்கு முன்பு பீகார் மற்றும் கிழக்கு உத்தரபிரதேசத்தில் மோடி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

Next Story