பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது! அத்வானி, முரளி மனோகர் ஜோஷியை சந்திக்கிறார் அமித்ஷா


பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது! அத்வானி, முரளி மனோகர் ஜோஷியை சந்திக்கிறார் அமித்ஷா
x
தினத்தந்தி 8 April 2019 10:34 AM IST (Updated: 8 April 2019 10:34 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் அறிக்கையை வெளியிடும் முன் அத்வானி, முரளி மனோகர் ஜோஷியை அமித்ஷா சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், பாஜக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது. ஏற்கனவே, காங்கிரஸ் பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகளுடன் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கையிலும் பல்வேறு திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் அறிக்கை வெளியிடும் முன், பாஜகவின் மிக மூத்த தலைவர்களான  எல்.கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகிய இருவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு  வழங்கப்படாததால், அவர்களது ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இன்று வெளியிடப்படும் பாஜக தேர்தல் அறிக்கை இரண்டு பாகங்களை கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் கட்சி சாதித்தது என்ன? மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் ஆகிய விவரங்கள் இரண்டு பாகங்களிலும் இடம் பெற்றிருக்கும் என தெரிகிறது.

Next Story