கடலில் உயிருக்கு போராடிய இளைஞரை காப்பாற்றிய கடற்படை அதிகாரிக்கு குவியும் பாராட்டு
கேரளாவில் கடலில் உயிருக்கு போராடிய இளைஞரை காப்பாற்றிய கடற்படை அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கேரள மாநிலம் வைபின் கடற்கரையில் கடற்படை அதிகாரி ராகுல் தலால், தன்னுடைய மனைவியுடன் நடந்து சென்றுள்ளார். அப்போது திலிப் குமார் என்ற இளைஞர் கடல்பகுதியில் உயிருக்காக போராடியுள்ளார். தன்னை காப்பாற்றுமாறு சத்தம் போட்டுள்ளார். அங்கிருந்தவர்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை. உடனடியாக இதனை பார்த்த ராகுல் தலால் வேகமாக நீந்தி சென்று இளைஞரை கடற்கரைக்கு மீட்டு, இழுத்துக் கொண்டுவந்தார்.
பயத்தில் இருந்த இளைஞர் தன்னையும் இழுத்துவிடாமல் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு அவரை காப்பாற்றியுள்ளார். கடற்கரைக்கு கொண்டுவந்ததும் இளைஞர் மூச்சுவிடவில்லை. அவர் மூச்சுவிடும் வகையில் தடையை ஏற்படுத்திய தாவரங்கள் சிக்கியிருந்ததை எடுத்தார். பின்னர் முதலுதவி கொடுத்துள்ளார். இதனையடுத்து இளைஞர் உயிர்பிழைத்தார். இந்த தகவலை இந்திய கடற்படை வெளியிட்டுள்ளது. அதிகாரி ராகுல் தலாலுக்கு பல்வேறு தரப்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படையின் பேஸ்புக் செய்தியை பகிர்ந்துவரும் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story