உத்தரபிரதேசத்தில் ராகுல் காந்தி பொதுக்கூட்டம் ரத்து
உத்தரபிரதேசத்தில் 3 இடங்களில் நடைபெற இருந்த ராகுல் காந்தி பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
சாகரன்பூர்,
உத்தரபிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் களைகட்டி உள்ளது. இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் சார்பில், கைரானா நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாம்லி, பிஜ்னோர், சாகரன்பூர் ஆகிய இடங்களில் பிரசார பொதுக்கூட்டங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா மற்றும் அந்த கட்சியின் மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோர் கலந்து கொள்ள இருந்தனர்.
இந்த நிலையில் மேற்கு உத்தரபிரதேசத்தில் நிலவிய மோசமான வானிலை காரணமாக அந்த 3 இடங்களில் நடைபெற இருந்த பொதுக்கூட்டம் நேற்று ரத்து செய்யப்பட்டது.
Related Tags :
Next Story