எல்.கே.அத்வானியுடன் அமித்ஷா சந்திப்பு


எல்.கே.அத்வானியுடன் அமித்ஷா சந்திப்பு
x
தினத்தந்தி 8 April 2019 10:16 PM GMT (Updated: 8 April 2019 10:16 PM GMT)

பா.ஜனதாவில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

புதுடெல்லி,

75 வயதை கடந்தவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்ற கட்சியின் முடிவு அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பா.ஜனதா வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய எல்.கே.அத்வானிக்கு சீட் மறுக்கப்பட்ட விவகாரம் கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. இதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் விமர்சனம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் எல்.கே.அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நேற்று நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின் நோக்கம் மற்றும் இந்த நிகழ்வுகளில் பேசப்பட்ட விவகாரம் குறித்து தகவல் எதுவும் இல்லை.

பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்ட நிலையில், அது வெளியான சில மணி நேரத்துக்குப்பின் இந்த சந்திப்புகள் நடந்து குறிப்பிடத்தக்கது.


Next Story