அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு குஜராத் கோர்ட்டு சம்மன் : மே 27–ந் தேதி ஆஜராக உத்தரவு


அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு குஜராத் கோர்ட்டு சம்மன் : மே 27–ந் தேதி ஆஜராக உத்தரவு
x
தினத்தந்தி 9 April 2019 4:39 AM IST (Updated: 9 April 2019 4:39 AM IST)
t-max-icont-min-icon

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு குஜராத் கோர்ட்டு சம்மன். மே 27–ந் தேதி ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

ஆமதாபாத்,

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது, குஜராத் மாநிலம் ஆமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் 5 நாட்களில் ரூ.750 கோடி செல்லாத நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் குற்றம் சாட்டி இருந்தனர். இதன்மூலம், கருப்பு பணம் வெள்ளையாக மாற்றப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக, அந்த வங்கியின் தலைவர் அஜய் பட்டேல், இருவர் மீதும் ஆமதாபாத்தில் உள்ள கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

சாட்சிகள் விசாரணை முடிந்தநிலையில், அவதூறு வழக்குக்கான முகாந்திரம் இருப்பதாக மாஜிஸ்திரேட்டு எஸ்.கே.காத்வி நேற்று கருத்து தெரிவித்தார். எனவே, ராகுல் காந்தி, சுர்ஜேவாலா ஆகிய இருவருக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். அடுத்த விசாரணை நாளான மே 27–ந் தேதி இருவரும் கோர்ட்டில் ஆஜராகுமாறு கூறினார்.


Next Story